search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆந்திர மாநில தேர்தல் அதிகாரி"

    ஆந்திராவில் மாநில தேர்தல் அதிகாரி கோபால கிருஷ்ணா திவிவேதி மீது முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளார். #ChandrababuNaidu
    அமராவதி:

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் இணைந்து சட்டசபைக்கும் வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்த முடிவுக்காக மாநில மக்கள் காத்திருக்கும் நிலையில், அங்கு அரசு பணிகளை மேற்கொள்ள தனக்கு அதிகாரம் இல்லை எனக்கூறி பணி செய்ய விடாமல் தடுப்பதாக மாநில தேர்தல அதிகாரி கோபால கிருஷ்ணா திவிவேதி மீது முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டி உள்ளார்.

    இதுதொடர்பாக தலைமை தேர்தல் கமி‌ஷனுக்கு அவர் புகார் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் அவர், ‘குடிநீர், போலாவரம் திட்டம், புதிய தலைநகரின் கட்டுமான பணிகள், பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளை ஆய்வு செய்ய நான் திட்டமிட்டு உள்ளேன். ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை சுட்டிக்காட்டி, முதல்–மந்திரிக்கு மறு ஆய்வு கூட்டங்களை நடத்த அதிகாரம் இல்லை என தேர்தல் அதிகாரி கூறி உள்ளார்’ என குற்றம் சாட்டி இருந்தார்.

    இதைப்போல முதல்–மந்திரியின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கூடுதல் இயக்குனரிடமும் (உளவுப்பிரிவு), முதல்–மந்திரிக்கு அறிக்கை கொடுக்க வேண்டாம் என தேர்தல் அதிகாரி தடுத்து இருப்பதாக கூறியுள்ள சந்திரபாபு நாயுடு, மாநில அரசு சட்டப்பூர்வமாக இயங்க அனுமதிக்குமாறு கோபாலகிருஷ்ணா திவிவேதியை அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டு உள்ளார்.#ChandrababuNaidu
    ×